திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1649 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ – நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது – தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய் அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி – அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி – அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே-இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற நின்ற நிலையிலும் போலே காணும் இவள் கண் விழித்தது) 2 | செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்னம் (- (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்;) (கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-)) செருவரை, Seruvarai - போர் வீரர்களை ஆசு அறுத்த, Aasu Aruttha - சீக்கிரமாகத் தொலைத்த சிலை அன்றோ, Silai Anro - சார்ங்க வில்லன்றோ கைத்தலத்தது, Kaithalaththathu - திருக்கையிலுள்ளது என்கின்றாள், Enkindraal - என்று சொல்லுகிறாள்; மற்றொருகை, Mattroru Kai - மற்றொரு திருக்கையிலே, முன், Mun - முன்பொருகால் பொரு வரை, Poru Varai - (சிறகோடு கூடிப்) போர் செய்த மலைகளை போர், Por - யுத்தத்தில் தொலைத்த, Tholaitha - பங்கமடைவித்த பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருச்சக்கரம் (உள்ளது) ஒப்பு, Oppu - ஒத்திருக்கும் விஷயத்தில் நின் ஒப்பார் ஒருவரையும் இலா, Nin Oppaar Oruvaraiyum Ila - உன்னோடொத்தவர்கள் ஒருவருமில்லாதிருக்கப்பெற்ற என் அப்பா, En Appa - என் நாயகனே; கரு வரை போல் நின்றானை, Karuvai Pol Nindranai - அஞ்சன மலைபோல் நிற்பவனான |