திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1650 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதிமாத்ர பிராவாண்யம் ஆகாது காண்- எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று நீங்கள் சொன்னால் -அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது – உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ -என்னா நின்றாள் – சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள்) 3 | துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3 | பதவுரை Show / Hideதுன்னு, Thunnu - நெருங்கியிருக்கின்ற (- (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….)) மா மணி, Ma Mani - சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற முடி மேல், Mudi Mel - கிரீடத்தின் மீது துழாய் அலங்கல், Thuzhai Alangkal - திருத்துழாய் மாலை தோன்றும ஆல் என்கின்றாள் ஆல், Thonrum Aal Enkindraal Aal - விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!; மின்னு, Minnu - ஜ்வலிக்கின்ற மா மணி, Ma Mani - சிறந்த மணிகளழுத்தின மகர குண்டலங்கள், Makara Kuntalangal - மகரக் குழைகள் வில் வீசும் என்கின்றாள் ஆல், Vil Veesum Enkindraal Aal - ஒளி வீசுகின்றன என்று சொல்லுகிறாளே! ; பொன்னின் மா மணி ஆரம், Ponnin Maa Mani Aaram - பொன்னாலே செய்யப்பட்டதும் சிறந்த ரத்னங்களழுத்தப்பட்டதுமான ஹாரமானது அணி ஆகத்து, Ani Aagathu - அழகிய திருமார்பிலே இலங்கும் ஆல் என்கின்றாள் ஆல், Ilangum Aal Enkindraal Aal - விளங்கா நின்றதே! என்று சொல்லுகிறாளே! ; கன்னி மா மதில், Kanni Maa Mathil - அழிவில்லாத பெரிய மதிள்களாலே புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட |