திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1651 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் – ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்- அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ – உக்தி மாத்ரத்திலே மீளாதே அவ்விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள் என்று தோற்றி இரா நின்றது) 4 | தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-4 | பதவுரை Show / Hideதார் ஆய தண் துளபம், Thaar Aaya Than Thulabam - மாலையாகிய குளிர்ந்த திருத்துழாயிலுள்ள (- (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்… ;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….)) வண்டு, Vandu - வண்டுகளாலே உழுத, Uzutha - (தேனும் சுண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட வரை மார்பன், Varai Maarban - மலைபோன்ற திருமார்பை யுடையவன் போர் ஆனை, Poar Aanaik - போர் புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய கொம்பு ஒசித்த, Kombu Osiththa - தந்தங்களை முறித்தொழித்த புள் பாகன், Pul Paagan - கருடவாஹநன் என் அம்மான், En Ammaaan - எனக்கு ஸ்வாமி ஆரானும் காண்மின்கள், Aaraanum Kaanmingal - யாராகிலும்பாருங்கள் அவனுக்கு, Avanukku - அப்பெருமானுடைய வாய், Vaai - திருவதரமானது அம் பவளம், Am Pavalam - அழகிய பவளம் போல் சிவந்தது கார் வானம், Kaar Vaanam - கறுத்த மேகம் நின்று அதிரும், Ninru Adhirum - நிலைநின்று கோஷிக்கப்பெற்ற |