திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1653 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி – கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்-அஞ்சன கிரி போலேயும் இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் – ஸ்ரமஹரதையும் அபரிச்சேத்யையும் இரண்டையும் சொல்லுகிறது) 6 | பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6 | பதவுரை Show / Hideஆயிரம் பேர் உடைய, Aayiram Per Udaiya - ஆயிரந் திருநாமங்களையுடைய (- (என்கின்றாள் ஆல்…. ;) (என்கின்றாள் ஆல்-;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-)) பேர் ஆளன் பேர் ஆளன் என்கின்றாள், Per Aalan Per Aalan Enkindraal - மஹாநுபாவனென்று பலகாலும் சொல்லுகின்றாள்; ஏர் ஆர், Aer Aar - அழகு பொருந்திய கனம், Kanam - கனகத்தினால் செய்யப்பட்ட மகர குண்டலத்தன், Makara Kuntalaththan - மகரக்குழைகளையுடையவன், எண் தோளன், En Tholan - எட்டு புஜங்களையுடையவன் நீர் ஆர், Neer Aar - நீர் நிறைந்த மழை முகிலே, Mazhai Mukile - கார்காலத்து மேகத்தையும் நீள் வரையே, Neel Varaiye - பெரிய மலையையும் ஒக்கும், Okum - ஒத்திருப்பன் கார் ஆர் வயல் அமரும், Kaar Aar Vayal Amarum - கருமை மிக்க கழனிகள் அமர்ந்திருக்கப்பெற்ற |