திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1655 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே அவன் அடியைப் பிடித்தும் மடியைப் பற்றியும் படியை அனுபவித்ததை கேட்டவர்கள்- இவளுக்கு இப்படி அனுபவம் செல்லா நின்றால் முலையில் பூம் பயலை பிறக்கும்படி விரஹ வ்யசனம் நடக்கைக்கு அடி என் என்று கேட்க – இவளுக்கு கிட்டே வந்து சம்ச்லேஷித்தது அல்லாதே அதூர விப்ரக்ருஷ்டமாய் வந்தாப் போலே தோற்றுகையாலே தன்னிடத்தில் வரவில் நிர்ணயம் பிறவாதே விரஹ கிலேசத்தை அடைந்தாள் என்று அவள் வார்த்தையாலே அறிந்தாளாக -அனுவதிக்கிறாள் -என்று சங்கதி – ஸ்ரீ பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்க ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே -பள்ளி யந்துலாத்திலே ஏறி உலவா நிற்பர்கள் காண் – என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் – அப்போது பால்யத்தாலே அவ்வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம் அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் – இதுவாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார்) 8 | கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-8 | பதவுரை Show / Hideகொற்றம் புள் ஒன்று ஏறி, Kotrham Pul Ondru Eri - வெற்றி பொருந்திய ஒரு கருடப் பறவையை மேற்கொண்டு (- (என்கின்றாள் ஆல்-;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-.)) மன்று ஊடே, Mandru Oode - திருவீதியிலே வருகின்றான், Varugiraan - எழுந்தருளுகிறான் வெற்றி போர், Vettri Por - ஜயசீலமான யுத்தத்திலே இந்திரற்கும் இந்திரனே ஒக்கும் என்கின்றாள், Indhirarkkum Indhirane Okum Enkindraal - மஹேந்திரனை ஒத்திருப்பன் என்கின்றாள்; அவன் ஆகம், Avan Aagam - அப்பெருமானுடைய திருமார்பை பெற்றக்கால், Petra Kaal - பெற்றால் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாள், Pen Pirandhom Uyyom O Enkindraal - பெண்ணாய் பிறந்த நாம் வாழ்ந்துபோக மாட்டோமோ என்கிறாள்; கற்ற நூல் மறை ஆளர், Katra Nool Marai Aalar - (முறையே) கற்கப்பட்ட சாஸ்த்ரங்களை யுடையரான வைதிகர் வாழ்கிற |