திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1658 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1658பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள் நமகக்குக் கைவளை கொள்ளத் தகாமை என் -என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்க – தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள்) 1
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1
பதவுரை Show / Hide
தெள்ளியீர், Thelliyeer - தெளிந்த அறிவு உடையவரே! (- (இவள்) இப்படிப்பட்ட இவள் (அப்படியிருக்க))
தேவர்க்கும் தேவர், Thevarkkum Thevar - தேவாதி தேவரே!
திரு தக்கீர், Thiru Thakkeer - பெரிய பிராட்டியார்க்குத் தகுதி யானவரே!
வெள்ளியீர், Velliyeer - சுத்தமான ஸ்வபாவத்தை யுடையவரே!
வெய்ய விழு நிதி வண்ணர், Veyya Vizhu Nidhi Vannar - காய்ச்சின சிறந்த பொன் போன்ற நிறமுடையவரே!
ஓ!, O - இஃது என்ன அநியாயம்!.
இவள், Ival - இப்பரகால நாயகியானவள்
துள்ளும் நீர், Thullum Neer - கரைபுரண்டு பெருகுகின்ற நீரை யுடைத்தான
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
தொழுதாள், Thozhuthaal - கையெடுத்துக் கும்பிட்டாள்
கள்வியோ, Kalviyoo - (ஆத்மாபஹாரம் செய்திலளாகை யாலே) கள்வியன்றே;
கை வளை கொள்வது, Kai Vazhai Kolvathu - (அடிச்சியான இவளுடைய) கைவளைகளைக் கொள்ளை கொள்வதானது
தக்கதே, Thakkadhe - உமக்குத் தகுந்ததோ?