திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1659 | பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஞை குலைந்து-ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்கிறபடியே அவிவாதம் தோற்ற ஓர் அஞ்சலி பண்ணினாள் ஆகில் இது குறையோ -என்று இறே கீழ்ச் சொல்லிற்று – இத்தைக் கேட்ட ஸ்ரீ சௌரி பெருமாள் -நீ நம்மைக் குறை சொல்லக் கடவையோ உன் மகளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ ஸ்திரீகளுக்கு நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்மா குணங்களில் பிரதான குணம் அன்றோ லஜ்ஜை – அது உன் மகளுக்கு இல்லையான பின்பு அவளை நியமிக்க வன்றோ அடுப்பது -என்ன அவளுடைய உக்தி வியாபாரங்கள் இருந்தபடியாலும் – சம்சர்க்க தோஷம் இருந்த படியாலும் – அவளை நியமிக்க என்பதும் ஓன்று உண்டோ இவளை அடியிலே அலைவலையாக்கி புறப்பட விட்ட இவர் கார்யமே தலை காட்டிற்று -என்கிறாள்) 2 | நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2 | பதவுரை Show / Hideஇவள், Ival - இப்பரகால நாயகியானவள் நீள் நிலா முற்றத்து நின்று, Neel Nila Muthrathu Nindru - உன்னதஸ்தானத்திலுள்ள நிலா முற்றத்தில் நின்று கொண்டு நோக்கினாள், Nokkinhaal - பார்த்தாள்; (தான் பார்த்துவிட்டு) காணும் ஓ! கண்ணபுரம் என்ற காட்டினாள், Kaanum O Kannapuram Endra Kaattinaal - ‘வாரீர்! பாருங்கோள் இதோ கண்ணபுரம்’ என்று (பிறர்க்கும்) காட்டினாள்; பாணனார் திண்ணம் இருக்க, Paananaar Thinnam Irukka - சேர்விக்கும ஆசார்யருடைய த்ருடாத்யவஸாயம் குறையற்றிருக்கையாலே இனி இவள் நாணுமோ, Ini Ival Naanumoo - இனி இவள் வெட்கப்பட்டு மீளக்கூடுமோ; நறையூரார்க்கே, Naraiyooraar Kke - திருநறையூர்ப் பெருமானாகிய எம்பெருமானுக்கே நன்று நன்று, Nandru Nandru - (தன் எண்ணம்) நன்றாய்த் தலைக்கட்டிற்று. |