திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1660 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1660பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இவள் நாணுமோ என்று இறே கீழ் சொல்லிற்று அந்த லஜ்ஜை தான் உண்டாவது சத்தை உண்டானால் இறே தான் பண்ணுகிற சிசுரோபசாரங்கள் கார்யமாய்த் தலைக் கட்ட காண்கிறிலோம் என்னாய் முடியப் போகிறதோ -என்கிறாள் தாபார்த்தராய் இருப்பார் தாப ஹரனான ஜலநிலையனை இறே பற்றுவது அவனைப் பற்றுமவள் அல்லை இறே இவள் அவனைப் பற்றுவார் முக்த ப்ராயரான சநகாதிகள் இறே இவள் பற்றுவது அர்ச்சாரூபத்திலே இறே அதில் தனக்கு தாப ஹராமான திருப்பதிகளிலே சிலவற்றைச் சொல்லுகிறாள்) 3
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள் பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள் உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ –8-2-3
பதவுரை Show / Hide
இவள், Ival - இப்பரகாலநாயகியானவள் (- (அதற்கு ஒருவரும் பதில் சொல்லுவாரில்லாமை யாலே))
அருவி சோர் வேங்கடம், Aruvi Soor Vengadam - அருவிகள் சொரிகின்ற திருமலையென்றும்
நீர்மலை என்று, Neermalai Endru - திருநீர்மலையென்றும் சொல்லி
வாய் வெருவினாள், Vaai Veruvinaal - வாய் பிதற்றினாள்;
மெய்யம் வினவி, Meyyam Vinavi - திருமெய்யத்தைப் பற்றிக் கேள்விகேட்டு
இருக்கின்றாள், Irukkindraal - வாளாவிருக்கிறாள்;
பெருகு சீர், Perugu Seer - சீர்மை மிகுந்த
கண்ணபுரம் என்று, Kannapuram Endru - திருக்கண்ணபுரம் என்று
பேசினாள், Pesinaal - வாயாற் சொன்னவளாய்க் கொண்டு (உடனே)
உருகினாள், Uruginhaal - நீர்ப்பண்டமானாள்;
உள் மெலிந்தாள், Ul Melindhaal - நெஞ்சி சிதிலகமாகப் பெற்றாள்;
இது என் கொல், Idhu En Kol - இப்படியுமொரு நிலைமை யுண்டாகக் கடவதோ?.