திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1661 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1661பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாய் வெருவினாள்-வினவி இருக்கின்றாள்-பேசினாள்-உருகினாள் என்கிற இவ்வாற்றாமை தான் உண்டானது தாரகம் உண்டானால் இறே அது இருந்தபடி என் என்ன-அது தானே இல்லை -என்கிறாள் – கீழ் உண்டான தசைகள் ஸ்வஸ்த்த தசைகள் என்னும்படி இருந்ததீ -என்கிறாள் ஊணும் உறக்கமும் உண்டானால் இறே கீழ்ப் பிறந்த அவஸ்தைகளுக்கு அவகாசம் உள்ளது) 4
உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லைப் பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான் கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல் வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ –8-2-4
பதவுரை Show / Hide
உண்ணும் நாள் இல்லை, Unnum Naal Illai - இவள் ஒருநாளும் உண்பதில்லை;
உறக்கம் தானும் இல்லை, Urakam Thaanum Illai - கண்ணுறங்குவது மில்லை;
பெண்மையும் சால நிறைந்திலள், Penmaiym Saala Niraindhilal - நன்றாக முதிர்ந்த பெண்மைப் பருவமுடையளல்லள்;
பேதை தான், Pethai Thaan - இளம் பெண்தான்; (இப்படியிருக்கச் செய்தேயும்)
கண்ணன் ஊர், Kannan Oor - எம்பெருமானுடைய திவ்யதேசமாகிய
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
தொழும், Thozhum - தொழாநின்றாள்;
இவட்கு எண்ணம், Ivadhku Ennam - இவளுடைய எண்ணம்
கார் கடல் வண்ணர்மேல், Kaar Kadal Vannarmel - கரிய கடல் போன்ற நிறத்தை யுடையரான சௌரிப் பெருமாள் மேலுள்ளது;
இது என் கொல், Idhu En Kol - இது என்ன ஆச்சரியம்!,