திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1662 | பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெண்மையும் சால நிறைந்திலள் -என்று இறே கீழ்ப் பாட்டில் சொல்லிற்று – அது காலாந்தரேண உண்டாகிறது –-அதுக்கடியான பெண்மை தான் உண்டோ -என்ன அது தானே இல்லை என்கிறாள் – நீ எது கொண்டு அறிந்தாய் என்ன கரண த்ரயங்களும் அவனை நினைத்த மாத்ரத்திலே விக்ருதமாகா நின்றன-இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள்) 5 | கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –8-2-5 | பதவுரை Show / Hideகண்ணன் ஊர், Kannan Oor - சௌரிப் பெருமாளுடைய திவ்ய தேசமான கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை தொழும், Thozhum - தொழுகின்ற காரிகை, Kaarikai - இவ்வழகியானவள் தன்னுடைய, Thannudaiya - தன்னுடைய உண்மை, Unmai - (வியாமோஹத்தின்) உண்மையை உரைக்கின்றாள், Uraikkindraal - வாய்விட்டுச் சொல்லுகிறாள்; பெண்மை என்?, Penmai En - இஃது என்ன பெண்மைக்குணம்? வெண்ணெய் உண்டு, Vennai Undu - (அவன் வெண்ணெயை (க்களவாடி) அமுதுசெய்து ஆப்புண்ட, Aappund - (தாம்பினால்) கட்டுண்ட வண்ணம், Vannam - ஸமாசாரத்தை விளம்பினால், Vilambinaal - (யாரேனும் ஏசிச்) சொன்னால் வண்ணமும், Vannamum - (இவளுடைய) மேனி நிறமும் பொன் நிறம் ஆவது ஒழியும், Pon Niram Aavathu Ozhiyum - பசலை நிறமாயிருக்குமிருப்பு தவிர்ந்து நல்ல நிறமாம்படி (இவள்) ஸந்தோஷப் படுகிறாள். |