திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1663 | பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டிலே-தன்னுடை உண்மை உரைக்கின்றாள் -என்றும் வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியும் -என்றும் சொன்னாய் அதில் உண்மை எது-பொன்னிறம் போனபடி என் -என்ன -அத்தைச் சொல்லுகிறாள் – ஸ்ரீ கண்ணனூர் -என்றாள் இறே கீழ்-அந்த ஸ்ரீ கண்ணனூரான ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலெ பெண்கள் அடைய குரவ கிம் கரிஷ்யந்தி தக்த்தா நாம் விரஹாக்னி நா -என்று-இக்குருக்கள் நம்மைச் செய்யப் புகுகிறது என் – விரஹ அக்னியால் வெந்து கிடக்கிற நம்மை ஆற்றி ஒரு குடம் நீர் சொரிவார்களோ -என்று பந்து வர்க்கங்களை நேராக விட்டு ஸ்ரீ கிருஷ்ணனை அனுபவிக்கக் கடவதாக யமுனா தீரத்தேற வந்தார்கள் – அங்கு ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டிலர்கள் – பின்பு அனுகாரத்திலே இழிந்து நான் நடவா நின்றேன் -நீ நடைச் சக்கரவத்து பிடித்துக் காண் -எனபது துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று பாரடா காளியனே -நான் உன் மேல் ஏறி ஆடப் புகா நின்றேன் -எனபது-இப்படிகளாலே அனுகரித்தார்கள் இறே இவளும் -ஸ்ரீ திரு ஆய்ப்பாடி -ஸ்ரீ திருக் கண்ணபுரம் ஆகவும் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ சௌரிப் பெருமாள் ஆகவும் – ஸ்ரீ சௌரிப் பெருமாள் தான் ஆகவும் அனுகரித்து பேசுகிறாள் – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-அஹம் பிரஹ்மாஸ்மி-என்று தான் அவனாய்-அவன் தானாய்-இறே இருப்பது இது இறே இவளுடைய வைதிக லோகாயுத மதம் இருக்கிறபடி – வேறே அனுகரித்தாரும் சிலர் உண்டு இறே கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -என்று-அவளைப் போலே ஜகத் காரண ரூபியை பற்றுமவள் அன்று இறே இவள் – அர்ச்சாவதார ரூபியை இறே இவள் அனுகரிப்பது இவ் வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அனுபவம் ஒழிய அந்த அந்த அவதாரங்களால் பிறக்கும் அனுபவத்தை நாய்க்கு இட என்று இருக்குமவள் இறே இவள் – ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஸ்ரீ ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து இப்பாட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -என்று ஸ்ரீ பட்டர் பாடே வந்து இப்பாட்டு இருக்கிறபடி என் -என்று கேட்க – மகள் அனுகாரத்தை தாய் அநு பாஷிக்கிறாள் -என்று அருளிச் செய்தார் – ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால் யோபவான் யன்நிமித்தம் வாயதாகம நகாரணம் -என்கிறபடியே நீ யார்-வந்தது எங்கு நின்றும் -என்று கேட்கக் கடவது இறே-அப்படியே -நீ எங்கு நின்றும் வந்தது -வந்த காரணம் ஏது -என்ன வந்தது இன்னிடத்தில் நின்றும் –-வந்த கார்யம் இன்னது -என்கிறாள்) 6 | வடவரை நின்றும் வந்தின்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே –8-2-6 | பதவுரை Show / Hideவட வரை நின்றும் வந்து, Vada Varai Nindrum Vandu - ‘வடக்குத் திருமலையில் நின்றும் புறப்பட்டு வந்து இன்று, Indru - இப்போது கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை இடவகை கொள்வது யாம், Idavakai Kolvadhu Yaam - இருப்பிடமாகக் கொண்டிருப்பது நானே’ என்று பேசினாள், Endru Pesinaal - என்று (சௌரிப் பெருமாளோடு ஐக்கியமாகத் தன்னைச்) சொல்லிக் கொண்டாள்; இவர், Ivar - இந்த சௌரிப்பெருமாள் இன்று, Indru - இன்றைக்கு கண் துயில், Kan Thuyil - (இவளுடைய) கண்ணுறக்கத்தை கொள்ள, Kolla - கொள்ளை கொள்வதற்கு, மடவரல், Madavaral - மடப்பமென்னும் குணத்தை யுடையவளும் மாதர், Maathar - விரும்பப்படும் அழகையுடையவளுமான என் பேதை இவள், En Pethai Ival - என் சிறுமியாகிய இவள் இவர்க்கு கடவது என், Ivarkku Kadavadhu En - இப்பெருமாளுக்குக் கடமைப்பட்ட விதம் என் கொல்!. |