திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1664 | பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர்க்கு இவள் கடவது என் -என்று இவள் கண்ணுறக்கத்தை இவர் கொள்ளுகைக்கு பிராப்தி உண்டோ என்றாய் இப்படி இவரோடும் இவளோடும் கொள் கொடை அற்றோ இருக்கிறது கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்றும் கண்ண புரம் தொழும் என்றும் கண்ண புரம் என்று பேசினாள் என்றும் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனேயாம் படி அன்றோ அவள் இருக்கிறது – அவரோடு அவளோடு பிராப்தி இல்லை என்று சொல்லக் கடவையோ அது கிடக்கட்டும் உன் மகள் தான் இவ்வீடுபாடுகள் தானே பொறுக்க ஷமையோ-என்ன இவற்றுக்கு இவள் இளைக்குமவளோ -என்கிறாள்) 7 | தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே –8-2-7 | பதவுரை Show / Hideபேசினும் தண் மதி காயினும், Pesinum Than Mathi Kaayinum - திரைக்கிளர்ச்சியையுடைய கடல் கோஷம் செய்தாலும் குளிர்ந்த சந்திரன் காய்ந்தாலும் (- (தரங்கம் நீர்) (இவள்)) இரங்குமோ, Irangumo - இளைப்பாளோ? (இளைக்கமாட்டாள்.) (ஏனென்னில்) எத்தானை நாள் இருந்து எள்கினாள், Ethanai Naal Irundhu Ezhkinal - நெடுநாளே பிடித்தும் (இவற்றிலே) ஈடுபட்டிருக்கிறாளன்றோ துரங்கம் வாய் கீண்டு உகந்தானது, Thurangam Vaai Kindu Uganthaanadhu - குதிரை வடிவாக வந்த அசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து மகிழ்ந்த பெருமானுடைய தொன்மை ஊர், Thonmai Oor - அநாதி திவ்யதேசமாகிய அரங்கம் என்பதே, Arangam Enbadhe - திருவரங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பதே இவள் தனக்கு ஆசை, Ival Thanakku Aasai - இவளுடைய ஆசையா யிருக்கிறது. |