திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1667 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1667பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால்-கவி பாடிற்று இன்னாரை பாடினேன் இந் நான் என் கவி தான் இன்னது -இது கற்றார்க்கு பலம் இன்னது -என்று இவை நாலையும் சொல்லுகிறார்) 10
கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல் சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர் நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –8-2-10
பதவுரை Show / Hide
கார் மலி, Kaar Mali - மேகங்கள் நிறைந்திருக்கப்பெற்ற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமானைக் குறித்து
பார் மலி மங்கையர் கோன் பரகாலன், Paar Mali Mangaiyar Kon Barakalan - இப்பூமியெங்கும் புகழ் மிக்க திருமங்கையாழ்வார்
சொல், Sol - அருளிச்செய்த
சீர் மலி, Seer Mali - பகவத்குணங்கள் நிறைந்த
பாடல், Paadal - பாசுரங்கள்
இவை பத்தும், Ivai Pathum - இத்திருமொழியை
வல்லவர், Vallavar - கற்றுணரவல்லவர்கள்
நீர் மலி, Neer Mali - கடல் சூழ்ந்த
வையத்து, Vaiyathu - இப் பூண்டலத்திலே
நீடு, Needu - நீண்டகாலம்
நிற்பார்கள், Nirpargal - நிலைநிற்கப் பெறுவர்.