திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1669 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குவலயா பீடமானது வெருவும்படியாக அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட அச் செயலுக்கு வளை இழந்தேன்) 2 | அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை –8-3-2 | பதவுரை Show / Hideஅரி, Ari - கறுப்பானது (- (இழந்தேன்-.)) விரவும், Viravum - கலந்து பரவப்பெற்ற முகில் கணத்தால், Mugil Kanathal - மேகக் கூட்டங்களாலும் அகில் புகையால், Akil Pugaiyal - அகில் புகைகளாலும் வரையோடும் தெரிவு அரிய, Varaiyodum Therivu Ariya - மலையோடு வாசியறிய வொண்ணாத மணி மாடம், Mani Maadam - மணிமயமான மாளிகைகளையுடைய திருக்கண்ணபுரத்து; உறையும் -; வரி அரவு இன் அணை துயின்று, Vari Aravu In Anai Thuyinru - கோடுகளையுடைய ஆதிசேஷனாகிற போக்யமான படுக்கையிலே சயனிப்பவனாயும் மழை மதத்த, Mazhai Mathath - மழைபோல் பெருகுகின்ற மதஜலத்தையுடையதும் சிறு தறு கண், Siru Tharu Kan - சிறுத்த வட்டணித்த கண்களையுடையதுமான கரி, Kari - குவலயா பீட மென்னும் யானை யானது வெருவ, Veruva - அஞ்சும்படியாக மருப்பு, Maruppu - (அதன்) தந்தத்தை ஒசித்தாற்கு, Osiththarku - ஒடித்தொழித்தவனாயுமுள்ள பெருமானுக்கு என் கனம் வளை, En Kanam Valai - எனது பொன்வளைகளை |