திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1670 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சந்த்ரனுக்கு வந்த ஷயத்தை போக்கி-அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன்) 3 | துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே –8-3-3 | பதவுரை Show / Hideமாடம் நெடுமுகட்டின் சூலிகை, Madam Nedumugattin Soolikai - உந்நதமாய் சிறந்த ரத்னங்களிழைக்கப் பெற்றதான மாடமாளிகைகளினுடைய நீண்ட உச்சியிலுள்ள சூலமானது (- (துங்கம் மா மணி) (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (இழந்தேன்-.)) போம் திங்கள், Pom Thingal - மேலே சஞ்சரிக்கின்ற சந்திரனையும் மா முகில், Maa Mukil - பெரிய மேகங்களையும் துணிக்கும், Thunikkum - துண்டிக்கப் பெற்ற பைங்கண் மால் விடை அடர்த்து, Paingkan Maal Vidai Adarthu - பசுமை தங்கிய கண்களையுடைய பெரிய எருதுகளை அழியச் செய்தவனாயும் பனி மதி கோள் விடுத்து, Pani Mathi Kol Viduthu - குளிர்ச்சியை இயல்வாகவுடைய சந்திரனுடை க்ஷயத்தைப்போக்கி உகந்த, Ugantha - திருவுள்ள முவந்தவனாயும் செங்கண் மால் அம்மானுக்கு, Sengkan Maal Ammanukku - புண்டரீகாக்ஷனாயு மிருக்கிற ஸர்வேச்வரன் விஷயத்திலே என் செறி வளை, En Seri Valai - என்னுடைய கழலாதிருக்கத்தக்க வளைகளை |