திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1673 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக ஸ்ரீ பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக ஸ்ரீ உகிராலே-அவன் உடைய சரீரத்தை பேதித்து தன்னுடைய ஸ்ரீ ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ-என்று இருந்தாயிற்று வளை இழந்தது) 6 | மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –8-3-6 | பதவுரை Show / Hideமடல் எடுத்த, Madal Edutha - மடல்களை உயரக்கொண்ட (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் ஒளி வளை இழந்தேன்-.)) நெடு, Nedu - நீண்ட தாழை, Thaalai - தாழைச் சொடிகளின் மருங்கு எல்லாம், Marungu Ellam - பக்கங்களிலெல்லாம் வளர், Valar - வளர்கின்ற பவளம், Pavalam - பவழங்களானவை திடல் எடுத்து, Thidal Eduthu - மேடுகளிலே படர்ந்து சுடர் இமைக்கும், Sudar Imaikkum - ஒளியுடன் விளங்கப்பெற்ற அன்று, Andru - முன்பொருகாலத்தில் இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனை அடல், Adal - யுத்தத்திலே அடர்த்து, Adarthu - நெருக்கி முரண் அழிய, Muran Azhiya - (அவனுடைய) மிடுக்கு அழியும் படியாக அணி உகிரால், Ani Ukiraal - அழகிய நகங்களாலே உடல் எடுத்த, Udal Edutha - (அவனது) உடம்பைப் பிளந்தொழிந்த பெருமானுக்கு, Perumanukku - ஸர்வேச்வரனுக்கு |