திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1675 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற – சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள்) 8 | கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே –8-3-8 | பதவுரை Show / Hideதெண் கயங்கள், Then Kayangal - தெளிந்த தடாகங்களானவை (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் செறி வளை இழந்தேன்-.)) கொங்கு மலி, Kongu Mali - பரிமளம் மிக்க கரு குவளை, Karhu Kuvalai - கரு நெய்தற்பூக்களை கண் ஆக, Kan Aaga - கண்களாகவும் செம் கமலம், Sem Kamalam - செந்தாமரைப் பூக்களை முகம், Mukam - முகங்களாகவும் மலர்த்தும், Malarthum - விகஸிப்பிக்கப்பெற்ற வங்கம் மலி தட கடலுள், Vangam Mali Thada Kadalul - அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலிலே வரி, Vari - கோடுகளையுடைய அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற இன், In - இனிமையான அணை, Anai - திருப்பள்ளி மெத்தையிலே துயின்ற, Thuyinra - சயனித்தருளாநின்ற செம் கமலம் நாபனுக்கு, Sem Kamalam Nabanukku - செந்தாமரைப்பூவைத் திருநாபியிலே உடையனான பெருமானுக்கு |