திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1683 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்- என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன் உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள்) 6 | மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-6 | பதவுரை Show / Hideமார்வில் திருவன், Marvil Thiruvan - திருமார்பிலே ஸ்ரீ மஹாலக்ஷிமியை யுடையவனும் (- (கோல் தும்பீ!-)) வலன் ஏந்து சக்கரத்தன், Valan Aendhu Chakkarathan - வலத்திருக்கையில் தரிக்கப்பட்ட திருவாழியையுடையவனும் பாரை, Parai - (அண்டபித்தியில்) ஒட்டிக்கிடந்த பூமியை பிளந்த பரமன், Pilanda Paraman - (மஹாவராஹமாகிக்) குத்திக் கொணர்ந்த மேன்மை வாய்ந்தவனும் பரம் சோதி, Param Sothi - நிகரற்ற சோதியே வடிவெடுத்தவனும் காரில் திகழ், Kaaril Thigal - கறுப்பு நிறத்தினால் விளங்குகின்ற காயா, Kaayaa - காயாம்பூப்போன்ற வண்ணன், Vannan - வடிவையுடையவனுமான பெருமானுடைய கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளி பொருந்திய திருமுடிமீதுள்ள தாரில், Thaaril - மாலையில் (தொடுக்கப்பட்டிருக்கின்ற) நறு, Naru - பரிமளம் மிக்க துழாய், Thuzhai - திருத்துழாயில் தாழ்ந்து, Thaazhnthu - தங்கியிருந்து ஊதாய், Oodhai - (வந்து) ஊது. |