திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1684 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் – அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் – மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய்) 7 | வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-7 | பதவுரை Show / Hideவாமநன், Vaamanan - வாமநாவதாரஞ் செய்தவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-.)) கற்கி, Karkki - கல்கியவதாரம் செய்யப் போகிறவனும் மது சூதன், Madhu Soothan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும் மாதவன், Madhavan - திருமகள் கொழுநனும் தார் மன்னு, Thar Mannu - (ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய தட மார்வன், Thada Marvan - பெரிய திருமார்பையுடையவனும் தாசரதி ஆய, Dasarathi Aaya - தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும் காமன் தன் தாதை, Kaman Than Thathai - மன்மதனுக்குத் தந்தையுமான தாமம், Thamam - மாலையிலுள்ள நறு, Naru - பரிமளம் மிக்க துழாய், Thuzhai - திருத்துழாயில் |