திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1688 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன் தன்னால் வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே – ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த முக்த்தன் உடைய ஸவபாவத்தை அனுசந்தித்து ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று) 1 | தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1 | பதவுரை Show / Hideதந்தை, Thandhai - தகப்பனாரான நந்தகோபருடைய காலில், Kaalil - காலில் பூட்டியிருந்த விலங்கு, Vilangu - விலங்கானது அற, Aru - இற்று முறிந்து விழும்படி வந்து தோன்றிய, Vandu Thonriya - திருவவதரித்த தோன்றல் பின், Thonral Pin - ஸ்வாமியான கண்ணபிரானுடைய பின்னே தமியேன் தன், Thamiyen Than - தனிப்பட்டிருக்கின்ற என்னுடைய சிந்தை, Sindhai - நெஞ்சானது போயிற்று, Poyitru - போய்விட்டது; அவனிடை, Avanidai - அப்பெருமானிடத்தில் திரு அருள், Thiru Arul - க்ருபையை பெறும் அளவு இருந்தேனை, Perum Alavu Irundhenai - பெறுவதற்க ஸமயம் பார்த்திருக்கின்ற என்னை அந்தி காவலன், Andhi Kavalain - இராப்பொழுதுக்கு இறைவனான சந்திரனுடைய அமுது உறு, Amuthu Uru - அமுதம் மிக்க பசுங் கதிர் அவை, Pasung Kathir Avai - அப்போதுண்டான கிரணங்களானவை சுட, Suda - தஹிக்க, அதனோடும், Adhanodum - அதோடுகூட, மந்த மாருதம், Mantha Maarutham - மெல்லிய தென்றற்காற்றும் வனம் முலை தடம் வந்து, Vanam Mulai Thadam Vandu - அழகிய முலைத்தடத்திலே வந்து வீசி வலி செய்வது ஒழியாது, Vali Seivathu Ozhiyadhu - ஹிம்ஸைபண்ணுவதில் நின்றும் ஓய்கிறதில்லை. |