திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1693 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ) 6 | முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண் துயிலா
கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –8-5-6 | பதவுரை Show / Hideமுரியும், Muriyum - கிளர்ந்து அலைகின்ற வெண் திரை, Ven Thirai - வெளுத்த அலைகளையுடைய முதுகயம், Muthugaiyam - ஸமுத்ரமானது தீப்பட, Theepada - தீக்கொளுவியெரியும்படி முழங்கு அழல் எரி அம்பின், Muzhangu Azhala Eri Ambin - ஒலியுடைய நெருப்பு எரியாநின்றுள்ள அம்புகளையுடைய வரி கொள் வெம் சிலை, Vari Kol Vem Silai - அழகியதாய்க் கொடிதாயிருந்துள்ளவில்லை வளைவித்த, Valaivitha - வளையச் செய்த மைந்தனும், Mainthanum - மஹாவீரனான இராமபிரானும் வந்திலன், Vandhilan - வரவில்லை; என் செய்கேன், En Seigain - என்ன பண்ணுவேன்? ; எரியும், Eriyum - பிரகாசித்துக்கொண்டிருந்த வெம் கதிர், Vem Kathir - ஸூர்யனும் துயின்றது, Thuyinrathu - அஸ்தமித்தான்; பாவியேன், Paviyen - பாவியான என்னுடைய இணை நெடுங்கண் துயிலா, Inai Nedungkan Thuyila - பெரிய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை; ஊழியின், Oozhiyin - கல்ப காலத்திற்காட்டிலும்; பெரியன, Periyan - பெரியவையாயுள்ள கரிய நாழிகை, Kariya Naazhigai - இரவு நாழிகைகள் கழியும் ஆறு அறியேன், Kazhiym Aaru Ariyen - எப்படி கழியப் போகின்றனவோ அறிகின்றிலேன். |