திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1701 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 4 | மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-4 | பதவுரை Show / Hideகொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய (- (அதற்காக) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.)) இலங்கை, Ilankai - லங்காபுரியில் புகல் உற்று, Pugal Utru - பிரவேசிக்கவேண்டி மல்லை முந்நீர், Mallai Munnir - செழி்ப்பான கடலானது அதர் பட, Adhar Pada - வழிபடும்படியாக வரி வெம் சிலை, Vari Vem Silai - வரிகளை யுடையதாய் வெவ்வியதான வில்லை கால் விளை வித்து, Kaal Vilai Viththu - வளையச்செய்து கொல்லை விலங்கு, Kollai Vilangu - காட்டுமிருகங்கள் (வாநரமுதலிகள்) பணி செய்ய, Pani Seyya - கைங்கரியம் பண்ண தொல்லை மரங்கள், Thollai Marangal - பழைய மரங்களையும் புகப் பெய்து, Pugap Peidhu - கடலினுட் புகும்படியாக வெட்டிப்போட்டு துவலை, Thuvilai - திவலைகள் நிமிர்ந்து, Nimirndhu - கிளர்ந்து வான், Vaan - ஆகாசத்திலே அணவ, Anava - அளாவும்படியாக கல்லால், Kallal - மலைகளைக் கொண்டு கடலை, Kadalai - ஸமுத்ரத்தை அடைத்தான், Adaiththaan - அணைசெய்த எம்பெருமானுடைய |