திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1705 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் – ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று பிராப்ய ஆபாசங்களையும் விட்டு சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் – எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை உண்டாகையாலே எங்கனே வந்து இருப்பது என்ன ஸ்ரீ பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் – நெஞ்சை தேற்றுகிறார் -இரண்டு பாட்டாலும்) 8 | மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மறுத்தும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-8 | பதவுரை Show / Hideமனமே, Maname - நெஞ்சே! (- வருந்தாது இரு வருத்தப்படாமலிரு; (ஏனென்றால்) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.)) நீ, Nee - நீ மால் ஆய், Maal Aay - மயக்கங்கொண்டு அரு துயரில், Aru Thuyaril - அநுபவித்து முடிக்கப் போகாத துக்கங்களில் (ஈடுபட்டு) வலி மிக்க, Vali Mikka - மிருந்த வலிமையையுடையதாய் கால் ஆர், Kaal Aar - வேரூன்றியிருந்ததான மருதும், Maruthum - இரட்டை மருதமரத்தையும் காய் சினத்த, Kaai Sinath - மிகுந்த கோபங்கொண்டு வந்த கழுதும், Kazhudum - பேய்ச்சியாகிய பூதனையையும் கதம், Katham - கோபத்தையுடைய மா, Maa - (சேசியென்னும்) குதிரையையும் கழுதையும், Kazhudaiyum - கழுதைவடிவங் கொண்டுவந்த தேநுகாஸுரனையும் மால் ஆர் விடையும், Maal Aar Vidaiyum - பெரிய வடிவம் பூண்டுவந்த விருஷபங்களையும் மத கரியும், Madha Kariyum - (குவலயாபீடமென்னும்) மதயானையையும் மல்லர் உயிரும், Mallar Uyirum - மல்லர்களின் உயிரையும் மடிவித்து, Madiviththu - முடித்தவனும் காலால், Kaalal - திருவடியினால் சகடம், Sakadam - சகடாஸுரனை பாய்ந்தான், Paayndhaan - பாய்ந்து முடித்தவனுமான பெருமானுடைய |