திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1709 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1709பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம்) 2
இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து துணை மலி முலையவள் மணமிகு கலவியுள் மண மலி விழவினொடடிய வரளவிய கண மலி கண புர மடிகள் தமிடமே –8-7-2
பதவுரை Show / Hide
மணம் மலி, Manam Mali - மகிழ்ச்சி மிகுந்த
விழவினொடு, Vizhavinodu - திருவிழாக்களில்
அடியவர், Adiyavar - ஸ்ரீவைஷ்ணவர்கள்
அளவிய, Alaviy - நெருங்கப்பெற்ற
கணம், Kanam - திரள்
மலி, Mali - நிறைந்துள்ள
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
இணை மலி, Inai Mali - சேர்த்தி பொருந்திய
மருத, Marutha - (இரட்டை) மருதமரங்களை
இற, Ira - இற்று முறிந்துவிழும்படி (செய்தவனும்)
எருதினொடு, Eruthinodu - (ஏழு) எருதுகளோடே
இகல் செய்து, Ikal Seidhu - போர்புரிந்து
துணை மலி முலையவள், Thunai Mali Mulaiyaval - சேர்த்தியழகுவாய்ந்த முலைகளை யுடையளான நப்பின்னைப் பிராட்டியின்
மணம், Manam - விவாஹத்தாலுண்டாகக் கூடிய
மிகு கலவி, Migu Kalavi - மிகுந்த ஸம்ச்லேஷத்தை
உள், Ul - உட்கொண்ட
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.