திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1710 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1710பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே அவனே ரஷகனாம்படி இருக்கை- மலையை குடையாக எடுத்து பரிஹரித்து ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர்) 3
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை யெடுவிய நெடியவர் முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல் கயல் துளு கண புர மடிகள் தமிடமே –8-7-3
பதவுரை Show / Hide
முயல் துளர், Muyal Thular - முயற்சிசெய்கிற களைக்கொட்டுகளையுடைய
மிளை, Milai - சிறுதூறுகளில் நின்றும்
முயல், Muyal - முயல்களானவை
துள, Thula - துள்ளவும்,
வளம், Valam - செழிப்பாக
விளை, Vilai - விளைகின்ற
வயல், Vayal - கழனிகளிலே
கயல், Kayal - கயல்மீன்கள்
துளு, Thulu - துள்ளவும் பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
புயல் உறு, Puyal Uru - பெருங்காற்றோடு கூடின
வரை மழை, Varai Mazhai - கல் மழை
பொழிதர, Pozhithara - பொழியுமளவில்
மணி நிரை, Mani Nirai - அழகிய பசுக்கள்
மயல் உற, Mayal Ura - கலங்கி நிற்க (அப்போது)
வரை, Varai - (கோவர்த்தன) மலையை
குடை, Kudai - குடையாக
எடுவிய, Eduviya - எடுத்த
நெடியவர், Nediyavar - மஹாபுருஷனான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்ய தேசமாம்.