திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1711 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூவை இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 4 | ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ
போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மது கரம் குலவிய மலர் மகள்
காதல் செய் கண புர மடிகள் தமிடமே –8-7-4 | பதவுரை Show / Hideநல் விரை, Nal Virai - நல்ல பரிமளத்தையுடைய மலர், Malar - பூக்களை கோதிய, Kothiya - கொந்தி, அவை அஸார மென்று விட்டு வந்த மதுகரம், Mathugaram - வண்டுகள் குலவிய, Kulaviy - சூழ்ந்து பரவப்பெற்ற மலர், Malar - (தாமரை) மலரில் அவதரித்த மகள், Magal - பெரிய பிராட்டியார் காதல் செய், Kaadal Sei - விரும்பப்பெற்ற கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,- ஏதலர், Aethalar - பகைவரான சிசுபாலாதிகள் நகை செய, Nakai Sei - சிரிக்கும் படியாக இளையவர் அளை வெணெய் போது செய்து, Ilaiyavar Alai Venei Podhu Seidhu - இளமகளிர் கடைந்து வைத்த வெண்ணெயைத் திருத்தியாக அமுது செய்து அமரிய, Amariya - ஸந்தோஷித்த புனிதர், Punithar - பவித்திரரான அடிகள் தம் இடம், Adigal Tham Idam - ஸ்வாமியின் திவ்ய தேசமாம். |