திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1712 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் செய்து –-த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய – ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை) 5 | தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே –8-7-5 | பதவுரை Show / Hideகணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,- தொண்டரும், Thondarum - ஸ்ரீ வைஷ்ணவர்களும் அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும் முனிவரும், Munivarum - யோகிகளும் தொழுது எழ, Thozhuthu Ezha - வணங்கி உஜ்ஜீவிக்கும்படியாக அண்டமொடு, Andamodu - மேலுலகங்களையும் அகல் இடம், Akal Idam - பரம்பிய நிலவுலகங்களையும் அளந்தவர், Alandhavar - அளந்து கொண்டவரும் விண்டவர், Vintavar - சத்துருக்கள் அழிந்து போம்படி அமர் செய்து, Amar Seidhu - யுத்தம் பண்ணி மதிள் இலங்கை, Mathil Ilangai - மதிளையுடைய இலங்காபுரி முன், Mun - முன்பொருகால் எரி எழ, Eri Ezha - தீக்கொளுவி யெரியும்படியாக கண்டவர், Kandavar - ஸங்கல்பித்தவருமான அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய இடம், Idam - திவ்யதேசமாம். |