திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1713 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1713பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே இளைதாய் கொழுவியதாய் அழகியதான பூவிலே முழுகின வண்டின் உடைய பண் கிளர்ந்த ஸ்ரீ திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே) 6
மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில் தழுவிய வுருவினர் திருமகள் மருவிய கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண் எழுவிய கண புர மடிகள் தமிடமே –8-7-6
பதவுரை Show / Hide
திருமகள் மருவிய, Thirumagal Maruviya - எரிய பிராட்டியார் பொருந்தியிருக்கப்பெற்ற (- (இன்னமும்))
கொழுவிய செழு, Kozhuviya Sezhu - மிகவும் செழுமைதங்கிய
மலர், Malar - தாமரைப்பூவிலே
முழுசிய, Muzhuchiya - அவகாஹித்த
பறவை, Paravai - (வண்டுகளாகிய) பறவைகளினுடைய
பண், Pan - இசைப்பாட்டுகள்
எழுவிய, Ezhuviya - எங்கும் வியாபிக்கப்பெற்றதான
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
மழு, Mazhu - மழுவை
இயல்படை உடையவன் இடம், Iyaldapai Udaiyavan Idam - விதேயமான ஆயுதமாகவுடைய பெருமானது இருப்பிடம்;
மழை முகில் தழுவிய உருவினர், Mazhai Mukil Thazhuviya Uruvinar - நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற திருவுருவத்தை யுடையரான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்ய தேசமாம்.