திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1714 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார் தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கண்ண புரம்) 7 | பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம்
எரிதி யொடென வினவியல் வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்
கருதிய கண புர மடிகள் தமிடமே –8-7-7 | பதவுரை Show / Hideசுருதியொடு, Surudhiyodu - ஸ்வரத்தோடு கூடின அரு மறை, Aru Marai - அருமையான வேதங்களை முறை, Murai - முறைப்படியே சொலும், Solum - ஓதுகின்ற அடியவர், Adiyavar - ஸ்ரீ வைஷ்ணவர்கள் கருதிய, Karuthiya - (நமக்கு இவ்விடமே ப்ராப்யம் என்று) அநுஸந்திக்கப்பெற்ற கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,- பரிதியொடு, Paridhiyodu - ஸூர்யனென்ன அணி மதி, Ani Mathi - அழகிய சந்திரனென்ன பனி வரை, Pani Varai - இமயமலை முதலிய குலபர்வதங்களென்ன திசை, Thisai - திக்குக்களென்ன நிலம், Nilam - பூமண்டல மென்ன எரி, Eri - ஜ்வலிக்கின்ற தியொடு, Thiyodu - அன்நி யென்ன என, En - என்று சொல்லப்படுகிற இன, Ina - இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம் இயல்வினர், Iyalthinavar - ப்ரகாரமாகவுடையவரும் செலவினர், Selavinar - இவற்றை நடத்திக்கொண்டு போருகிறவருமான அடிகள் தம் இடம், Adigal Tham Idam - ஸ்வாமியின் திவ்ய தேசமாம். |