திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1716 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலரை தனக்கு இருப்பிடமாக வுடையாளாக இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் – தன்னோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டி என்று இப்படி சொல்லப் படுகிற நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையராய் இருக்கிற இவர்களோடும் – வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள ஸ்ரீ திரு ஆழியை உடையனுமாய் நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை உடையவர்) 9 | புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய
நில மகளென வின மகிளர் களிவரொடும்
வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை
கல மனு கண புர மடிகள் தமிடமே –8-7-9 | பதவுரை Show / Hideநிதி குவை, Nidhi Kuvai - பொற்குவியல்களையுடைய (- (ஸமுத்ரத்தை சமீபத்திலுடைத்தான)) கலம், Kalam - மரக்கலங்கள் மனு, Manu - பொருந்தி யிருக்கப்பெற்ற கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரம்,- புலம் மனு, Pulam Manu - இந்த்ரியங்கள் அழுந்திக்கிடக்கும் படியாக அழகுவாய்ந்த மலர் மிசை, Malar Misai - தாமரைப் பூவிலுண்டான மலர்மகள், Malar Magal - பெரிய பிராட்டியோடு புணரிய, Punarai - கூடின நிலம் மகள், Nilam Magal - பூமிப்பிராட்டியார் என இன, En In - என்று இப்படிப்பட்ட மகளிர்களிவரொடும், Magalirgal Ivarodum - திவ்ய மஹிஷிகளோடும் வலம் மனு, Valam Manu - வலத்திருக்கையில் பொருந்திய படை உடை, Padi Udai - திருவாழிப்படையையுடைய வரும் மணி வணர், Mani Vanar - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவருமான அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய இடம், Idam - திவ்யதேசமாம். |