திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1718 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1718பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் – சேஷ பூதனான நான் காணப் பெற்றேன்) 1
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன் ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள் கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே –8-8-1
பதவுரை Show / Hide
முது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டு கொண்டேன்-.))
வானோர் அளவும், Vaanor Alavum - தேவர்களின் எல்லையளவும்
வளர்ந்த காலம், Valarntha Kaalam - பரந்து சென்ற காலத்திலே
வலி உருவின் மீன் ஆய் வந்து, Vali Uruvin Meen Aay Vandhu - வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து
வியந்து, Viyandhu - ஆச்சரியப்படும்படியாக
உய்யக்கொண்ட, Uyyaikonda - எல்லாரையும் பிழைப்பித்தருளின
தண் தாமரை கண்ணன், Than Thamarai Kannan - குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும்
ஆனா உருவின் ஆன் ஆயன் அவனை, Aana Uruvin Aan Aayan Avanai - விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை,
அம், Am - அழகிய
மா, Maa - பரந்த
விளை, Vilai - விளைவுமிக்க
வயலுள், Vayalul - வயல்களை யுடையதும்
கான் ஆர் புறவில், Kaan Ar Puravil - காடுகள் செறிந்த பர்யந்தங்களை யுடையதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே