திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1721 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1721பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும் சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த திரு வுகிரை உடையவனை) 4
உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4
பதவுரை Show / Hide
உளைந்த, Ulaindha - கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
அரியும், Ariyum - சிங்கவுருவத்தையும்
மானிடமும், Maanidamum - மனிதவுருவத்தையும்
உடனாய் ஒன்றுவித்து, Udanai Onruvithu - ஒருசேரப் பொருந்தச் செய்து
தோன்ற, Thondra - (நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது)
விளைந்த, Vilaintha - உண்டான
சீற்றம், Seetrum - கோபத்தைக் கண்டு
விண் வெதும்ப, Vin Vethumba - விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க
வேற்றோன், Vetroron - பகைவனான இரணியனுடைய
அகலம், Agalam - மார்பை
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே
பிளந்து, Pilandhu - இருபிளவாக்கி
வளைந்த உகிரானை, Valaindha Ukiraanai - வளைந்த நகங்களையுடைய பெருமானை,
பெரு, Peru - பெருத்த
தண், Than - அழகிய
செந்நெல் குலை, Sennel Kulai - செந்நெற்கதிர்கள்
தடிந்து, Thadinthu - வயிரம்பற்றி
களம் செய், Kalam Sei - இருள் மூடியிருக்கப்பெற்ற
புறவில், Puravil - சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே