திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1722 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1722பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு நிலை நின்ற வடிவு) 5
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-5
பதவுரை Show / Hide
தொழும் நீர், Thozhum Neer - கண்டவாறே வணங்கவேண்டும் படியான நீர்மையையுடைய (- (அடியேன் கண்டு கொண்டேன்-.))
வடிவின், Vadivin - வடிவு கொண்ட
குறள் உரு ஆய், Kural Uru Aay - வரமந ரூபியாய்
வந்து தோன்றி, Vandhu Thondri - அவதரித்து
மாவலிபால், Mavalipaal - மஹாபலியினிடத்தில்
முன், Mun - முன்பொருகால்
முழுநீர் வையம், Muzhneer Vaiyam - கடல் சூழ்ந்த வுலகத்தை
கொண்ட, Konda - இரந்து பெற்ற
மூவா உருவின், Moova Uruvin - விகாரமற்ற ரூபத்தையுடையனான
அம்மானை, Ammaanai - ஸர்வேச்வரனை,
உழு நீர், Uzhu Neer - (எப்போதும்) உழுவதையே இயல்வாகவுடைய
வயலுள், Vayalul - வயல்களிலே
பொன் கிளப்ப, Pon Kilappa - பொன் விளையப் பெற்றதும்
ஒருபால், Orupaal - வேறு சில இடங்களில்
முல்லை, Mullai - முல்லைமலர்களும்
முகையோடும், Mugaiyodum - கருமுகைமலர்களும்
கழுநீர், Kazhunir - செங்கழுநீர்ப்பூக்களும்
மலரும், Malarum - மலரப் பெற்றதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே