திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1723 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1723பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 6
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-6
பதவுரை Show / Hide
வடி வாய், Vadi Vaai - கூர்மை பொருந்திய வாயையுடைய (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
மழுவே, Mazhuve - கோடாலியையே
படை ஆக, Padai Aaga - ஆயுதமாகக் கொண்டு
வந்து தோன்றி, Vandhu Thondri - (பரசுராமனாய்த்) திருவவதரித்து
மூ எழுகால், Moo Ezhugaal - இருபத்தொரு தலைமுறையளவும்
படி, Padi - பூமியில்
ஆர், Aar - நிறைந்திருக்கிற
அரசு, Arasu - க்ஷத்ரியர்களாகிற
களை, Kalai - விரோதிகளை
கட்ட, Katta - தொலைத்த
பாழியானை, Paazhiyaanai - மிடுக்குடையனான
அம்மானை, Ammaanai - எம்பெருமானை,-
வண்டு, Vandu - வண்டுகளானவை
குடி ஆ, Kudi Aa - குடும்பமாக
கொண்டு உண்ண, Kondhu Unna - (மதுவை) எடுத்துப் பருகும்படியாக
கோலம் நீலம், Kolam Neelam - அழகிய நீலோற்பல மலர்கள்
மட்டு, Mattu - மதுவை
உகுக்கும், Ugukkum - பெருகச்செய்யப் பெற்ற
கடி ஆர் புறவின், Kadi Aar Puravin - பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில்