திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1728 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன்) 1 | கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –8-9-1 | பதவுரை Show / Hideமானம் கை மதம் யானை, Maanam Kai Matham Yaanai - நீண்ட துதிக்கையையுடையதும் மதங்கொள்ளுமியல்வுடையதுமான கஜேந்திரனுடைய இடர், Idar - துயரத்தை தீர்த்த, Theertha - போக்கியருளின கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும் மை, Mai - மைபோன்ற நிறத்தையுடைய மானம் மணியை, Maanam Maniyai - பெருவிலைபெறும் நீல ரத்னம் போன்றவனும் அணி கொள் மரதகத்தை, Ani Kol Marathakaththai - அழகு பொருந்திய மரதகப் பச்சை போன்றவனும் எம்மானை, Emmaanai - எமக்கு ஸ்வாமியும் எம்பிரானை, Embiraanai - எமக்கு மஹோபகாரம் செய்தருள்பவனும் ஈசனை, Eesanai - ஸர்வேச்வரனும் எம் மனத்துள் அம்மானை, Em Manaththul Ammmaanai - என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை அடியேன் அடைந்து, Adiyean Adaindhu - அடியேன் ஆச்ரயித்து உய்ந்து போனேன், Uyinthu Ponaen - உஜ்ஜீவித்துப் போனேன் |