திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1729 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை – ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன்) 2 | தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2 | பதவுரை Show / Hideதரு, Tharu - கல்பவிருக்ஷம் போன்றவனும் (- (அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேன்-,)) மானம், Maanam - பெரிய மழை முகிலை, Mazhai Mukilai - காளமேகம் போன்றவனும், பிரியாது, Priyaadhu - ஒரு காலும் விட்டுநீங்காமல் தன் அடைந்தார், Than Adaindhaar - தன்னை வந்து பணிந்தவர்கட்கு வரும், Varum - நேர்கின்ற மானம், Maanam - அவமானத்தை தவிர்க்கும், Thavirkum - போக்குகின்றவனும் மணியை, Maniyai - நீல மணிபோன்றவனும் அணி உருவின், Ani Uruvin - அழகிய வடிவத்தையுடைய திருமாலை, Thirumaalai - லக்ஷ்மீநாதனும் அம்மானை, Ammaanai - ஸர்வசேஷியா யிருப்பவனும் அமுதத்தை, Amudhatthai - அமிருதம் போன்றவனும் கடல் கிடந்த பெருமானை, Kadal Kidandha Perumai - திருபாற்கடலில் திருகண்வளர்ந்தருளும் பெருமானுமான ஸ்ரீசௌரிப் பெருமானை |