திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1731 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே – இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை – அடைந்து உய்ந்து போனேனே) 4 | மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே –8-9-4 | பதவுரை Show / Hideமிக்கானை, Mikkaanai - சிறந்தவனும் (- (அடைந்து உய்ந்து போனேன்-.)) மறை ஆய் விரிந்த விளக்கை, Marai Aayi Virindha Vilakkai - வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும் என்னுள் புக்கானை, Ennul Pukkaanaai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும் புகழ் சேர், Pugazh Ser - கீர்த்தி வாய்ந்தவனும் பொலிகின்ற பொன்மலையை, Polikindra Ponmalaiya - ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தக்கானை, Thakkaanai - தகவுடையவனும் கடிகை தட குன்றின் மிசை இருந்த, Kadikai Thada Kunrin Misai Irundha - கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற அக்காரக் கனியை, Akkaarak Kaniyai - அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை |