திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1732 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன – நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து – இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் – நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ) 5 | வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5 | பதவுரை Show / Hideஎந்தாள், Endhaal - எம்பெருமானே! என் மனத்தே, En Manathae - என் நெஞ்சினுள்ளே நீ வந்தாய், Nee Vandhaai - நீ வந்து புகுந்தாய்; வந்து புகுந்து பின்னை, Vandhu Pugundhu Pinnai - அங்ஙனம் வந்து சேர்ந்த பின்பு போய் அறியாய், Poi Ariyaai - திரும்பிப்போவதை அடியோடு மறந்திட்டாய்; இதுவே, Idhuvae - இந்தப் பேறுதானே அமையாதோ, Amaiyaa Tho - போராதோ? கொந்து ஆர், Kondhu Aar - கொத்துக்கள் நிரம்பிய பை பொழில், Pai Pozhil - பரந்த சோலைகளினால் சூழ், Sool - சூழப்பட்ட குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே கிடந்து, Kidandhu - சாய்ந்தருளி உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த மைந்தா, Maindha - ஸுந்தரனே!, உன்னை, Unnai - உன்னை என்றும், Endrum - என்றைக்கும் மறவாமை பெற்றேன், Maravaamai Pettraen - மறவாமலிக்கப் பெற்றேன். |