திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1733 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சைப் பார்த்து அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி அவன் நம்மை உபகரித்து நின்றான் நீ தப்பச் செய்யா நின்றாய் – என்கிறார்) 6 | எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6 | பதவுரை Show / Hideஎஞ்சா, Enjaa - ஒருகாலும் குறைதலில்லாத வெம் நரகத்து, Vem Narakathu - கொடிய நரகத்திலே அழுந்தி, Azhundhi - ஆழங்காற்பட்டு நடுங்குகின்றேற்று அடியேனை, Nadungikindretru Adiyanai - நடுங்குகின்ற என்னை அஞ்சேல் என்று, Anjeyl Endru - ‘பயப்படாதே’ என்று தேற்றி ஆட்கொள்ள வல்லானை, Aadkolla Vallaanaik - அடிமைகொள்ள வல்லவனும் மஞ்சு ஆர் மாளிகை சூழ், Manju Aar Maaligai Soozh - மேகமண்டலத்தளவும் ஓங்கின திருமாளிகைகளால் சூழப்பட்டு வயல், Vayal - வயல்களையுடைத்தான ஆலி, Aali - திருவாலியில் எழுந்தருளியிருக்கிற மைந்தனை, Maindhanai - ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிப்பெருமானை நெஞ்சே, Nenjey - மனமே! நீ, Nee - நீ இறைப்பொழுதும், Iraippoludhum - க்ஷணகாலமும் நினையாது இருத்தி கண்டாய், Ninaiyadhu Irudhi Kandaai - நினையாமலேயிருக்கிறாயே. |