திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1735 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு உற்றானாய் நின்றவன் பண்ணின உபகாரம் தான் என் என்ன ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி தந்தவன் அன்றோ -என்கிறார் அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில்) 8 | கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே –8-9-8 | பதவுரை Show / Hideகற்றார், Kattrar - விவேகிகள் பற்று அறுக்கும், Patru Arukkum - ‘இதன் ஸம்பந்தமே நமக்கு வேண்டா’ என்று வெறுத்து ஒழிக்கும்படியான பிறவி பெருகடலே, Piravi Perugadale - ஸம்ஸாரமாகிற பெரிய கடலையே பற்றா, Pattra - போக்யமாகப் பற்றி அடியேன் வந்து பிறந்தேன், Adiyen Vandu Pirandhen - (இந்நிலத்திலே) அடியேன் வந்து (பலபிறப்பும்) பிறவாநின்றேன் பிறந்த பின்னை, Pirandha Pinnai - இப்படி பிறந்து வருமடைவிலே, வற்றா நீர் வயல் சூழ், Vatra Nee Vayal Soozh - ஒருகாலும் வற்றாத நீர்வளமுடைய கழனிகளாலே சூழப்பட்ட வயலாலி, Vayalali - ‘வயலாலி’ என்றேபெயர் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கிற அம்மானை, Ammaanai - எம்பெருமானை பெற்றேன், Petren - ப்ராப்தனானேன், பெற்றதுவும், Pettrathuvum - அவனைப்பெற்றவாறே பிறவாமை பெற்றேன், Piravamai Petren - மறுபிறப்பில்லாமை பெற்றேன் |