திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1738 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1738பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும் சாபல்யத்தை உடைய எனக்கு – பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது – பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது – பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சுலபனான நீ சொல்லு) 1
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம் கண்டானே கண்ண புரத் துறை யம்மானே –8-10-1
பதவுரை Show / Hide
வண்டு ஆர் பூ, Vandu Aar Poo - வண்டுகள் நிறைந்து அழகிய
மா மலர், Maa Malar - சிறந்த (தாமரைப்) பூவிற் பிறந்த
மங்கை, Mangai - பெரிய பிராட்டியாருடைய
மணம் நோக்கம், Manam Nokkam - மகிழ்ச்சியோடு கூடிய திருக்கண் பார்வையை
உண்டானே, Undane - தாரகமாகக் கொண்டுள்ளவனே!
நால் வேதம் கண்டானே, Naal Vedham Kandaney - நான்கு வேதங்களாலும் காணப்பட்டவனே!
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
உறை, Urai - நித்யவாஸஞ்செய்தருள்கிற
அம்மானே, Ammaney - ஸ்வாமியே!,
உன்னை உகந்து உகந்து, Unnai Uganthu Uganthu - உன்னையே மிகவும் உசந்து
உன் தனக்கே, Un Thanakke - உனக்கே
தொண்டு ஆனேற்கு, Thondu Aanerku - அடிமை செய்யப் பெறவேணுமென்று ஆவல் கொண்டிருக்கும் என்விஷயத்தில்
என் செய்கிறாய், En Seigirai - என்செய்வதாக இருக்கிறாய்?
சொல்லு, Sollu - இதை அருளிச்செய்யவேண்டும்.