திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1739 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் தனக்கே தொண்டனானேன் என்றாரே-இங்கன் சொல்லுவான் என் புறம்பே ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயநீயருமாய் அன்றோ இருக்கிறது -என்ன அவர்கள் செய்தபடி செய்கிறார்கள் –-எனக்கு முன்னம் இதர விஷயங்களில் புத்தி இல்லை -என்கிறார்) 2 | பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால்
வருதேவர் மற்றுளர் என்று என் மனத்திறையும்
கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே –8-10-2 | பதவுரை Show / Hideபெரு நீரும், Peru Neerum - ஸமுத்ரங்களையும் (- (கண்ணபுரத்து உறை அம்மானே!- ;)) விண்ணும், Vinnum - ஆகாயத்தையும் மலையும், Malaiyum - மலைகளையும் உலகு ஏழும், Ulaku Ezham - ஏழுலகங்களையும் ஒரு தார் ஆ, Oru Thar Aa - ஒருமாலையாக நின்னுள், Ninnul - தன்னுள்ளே ஒடுக்கிய, Odakkiya - (ஒருமூலையில்) அடங்கச் செய்து கொண்ட நின்னை அல்லால், Ninnai Allal - உன்னைத்தவிர வரு தேவர் மற்று உளர் என்று, Varu Thevar Matru Ular Endru - (நான் ஆச்ரயணீயன் என்று சொல்லிக்கொண்டு) வரக்கூடிய தேவதைவேறொன்று இருப்பதாக என் மனத்து, En Manathu - என்னெஞ்சிலே இறையும், Irayum - சிறிதும் நான் கருதேன், Naan Karuthen - நான் நினைத்தறியேன். |