திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1740 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேறு சிலரை ஆஸ்ரயநீயர் அல்லர் -என்று நினைத்து இருக்கும் அளவேயோ – தாமஸ புருஷர்களோடு சம்பர்க்கமும் இல்லை – சாத்விகரை ஒழிய காலம் செலுத்தவும் மாட்டேன் -என்கிறார் – எண்ணாத மானிடத்தை எண்ணுமவன் அல்லேன் -என்றும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிவிலேன்-என்கிறார்) 3 | மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –8-10-3 | பதவுரை Show / Hideமற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு, Mattrum Oor Deivam Ulathu Endru Irupparodu - உன்னைக்காட்டிலும் வேறொரு தெய்வம் ஆச்ரயிக்கவுரியதாக உண்டு என்று நினைத்திருப்பவர்களோடே (- (கண்ணபுரத்து உறை அம்மானே!- ;)) உற்றிலேன், Utrilain - இணங்கமாட்டேன்; நின் திரு எட்டெழுத்தும், Nin Thiru Ettaezhuthum - உனது திருவஷ்டாக்ஷர மந்திரமானது மற்று எல்லாம் பேசிலும், Mattrum Ellam Pesilum - அறியவேண்டிய எல்லாப் பொருள்களையும் சொன்னாலும் நான் கற்று உற்றது, Naan Kattru Utrathu - (அத்திருமந்திரத்தை) நான் அதிகரித்துத் தெரிந்து கொண்ட பொருள்) உன் அடியார்க்கு அடிமை, Un Adiyarkku Adimai - பாகவத சேஷத்வமேயாம். |