திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1741 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அக்குணங்கள் எல்லாம் உண்டானாலும் நாம் விரும்பி இருத்தல் -செய்த அன்று -அன்றோ – அது -கார்யகரமாவது என்ன – நஞ்சு தாரகமான உனக்கு ஆகாதது -இல்லை ஸ்ரீ பிராட்டிமார் எனக்கு புருஷகாரம் ஆனபின்பு என் கார்யத்துக்கு குறை உண்டோ -என்கிறார்) 4 | பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே –8-10-4 | பதவுரை Show / Hideமண் ஆளா, Mann Aalaa - பூமிப்பிராட்டியை ஆள்பவனே! (- (கண்ணபுரத்துறையம்மானே!- ;)) வாள் நெடு கண்ணி, Vaal Nedu Kanni - ஒளிபொருந்திப் பெருத்த கண்களையுடையவளும் மது மலராள், Madhu Malaraal - மதுபெருகுகின்ற மலரிற் பிறந்தவளுமான ஸ்ரீ மஹா லக்ஷமிக்கு கண்ணாளா, Kannala - வல்லபனானவனே! பெண் ஆனாள், Pen Aanala - பெண்வடிவுகொண்டுவந்த பூதனையினுடைய பேர் இள கொங்கையின், Per Il Kongaiyin - பெரிதும் இளையதுமான ஸ்தநத்திலுள்ள ஆர் அழல் போல், Aar Azhai Pol - நெருப்புப்போன்றதான உண்ணா, Unnaa - உண்ணமுடியாத நஞ்சு, Nanju - விஷத்தை உண்டு, Undu - உறிஞ்சியுண்டு உகந்தாயை, Uganthaayi - திருவுள்ளமுவந்த வுன்னை நான் உகந்தேன், Naan Uganthen - நான் அடைந்து மகிழப் பெற்றேன். |