திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1742 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1742பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாமும் உகந்து –வலிய புருஷகாரமும் உண்டாய் –சுலபனும் -ஆனாலும்-நீர் புறம்பு பற்றற்று அகிஞ்சனராய் வரும் அன்று அன்றோ கார்யகரம் ஆவது -என்ன என் குறை அறுத்து வைத்தேன்-நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-என்கிறார்) 5
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன் உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய் கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே –8-10-5
பதவுரை Show / Hide
கற்றார் சேர், Kattrar Ser - பண்டிதர்கள் சேர்ந்து வாழுமிடமான (- (கண்ணபுரத்து, உறை அம்மானே!- ;))
பெற்றாரும், Pettrarum - மாதாபிதாக்களென்ன
சுற்றமும், Sutramum - உறவினரென்ன
என்ற இவை, Endra Ivai - என்று சொல்லப்படுகிற இப்படிப்பட்டவர்களை
நான் பேணேன், Naan Peene - நான் உற்றாராக விரும்ப மாட்டேன்;
மற்று ஆரும், Mattru Aarum - மற்று யாரிடத்திலும்
பற்று இலேன், Patru Ileen - பற்று உடையேனல்லேன்;
ஆதலால், Aathalal - ஆகையாலே
நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னைவந்து ஆச்ரயித்தேன்;
உள்ளத்து, Ullathu - திருவுள்ளத்திலே
உற்றான் என்று வைத்து, Utran Endru Vaiththu - இவன் நம்முடையவன் என்று அபிமானித்து
அருள் செய், Arul Sei - கிருபை பண்ணவேணும்.