திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1743 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1743பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைக் கொள்ளும் அளவு போராது- செய்த குற்றங்கள் ஆராய்வதாக நீ இட்ட யமாதிகளும் என் பக்கல் வாராத படி பண்ண வேணும் -என்கிறார்) 6
ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது சோத்தம் நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ காத்தி போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-6
பதவுரை Show / Hide
உன், Un - உன்னுடைய (- (கண்ணபுரத்துறையம்மானே!- ;))
சே அடி, Sae Adi - திருவடிகளை
ஏத்தி, Aethi - துதித்து
எண்ணி இருப்பாரை, Enni Iruppaarai - சிந்தித்திருக்குமவர்களை
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
பார்த்து இருந்து, Paarthu Irundhu - உயிர்போகுங்காலத்தை எதிர்பார்த்திருந்து
அங்கு, Angu - அந்த சரமஸமயத்தில்
பற்றாது, Patraathu - வந்து கிட்டமாட்டாமல்,
சோத்தம், Soththam - “நமஸ்காரம்,
நாம் அஞ்சுவதும், Naam Anjuvadhum - நாம் (அணுகுவதற்கும்) அஞ்சுகின்றோம்”
என்று, Endru - என்று சொல்லி
தொடாமை, Thodamai - தொடுதலும் செய்யாதபடி
நீ காத்தி போன்ம், Nee Kaathi Poonm - ரக்ஷித்தருளுகிறாயன்றோ.