திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1744 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் கிட்டாமையையோ – உன் பிரபாவத்தாலே அவர்களுக்கு மறைந்து வர்த்திக வேண்டும்படியாய் அன்றோ இருக்கிறது -என்கிறார்) 7 | வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-7 | பதவுரை Show / Hideவெள்ளை நீர், Vellai Neer - திருப்பாற்கடலினுடைய (- (கண்ணபுரத்துறை அம்மானே!- ;)) வெள்ளத்து, Vellathu - வெள்ளத்திலே அணைந்த, Anaindha - சேர்ந்த அரவு அணைமேல், Aravu Anaimeel - சேஷசயனத்தின்மேலே துள்ளு நீர், Thullu Neer - சிறுதிவலைகள் மெள்ள, Mella - மெதுவாகவீச துயின்ற, Thuyinra - திருக்கண்வளர்ந்தருள்கின்ற பெருமானே, Perumane - ஸ்வாமியே! வள்ளலே, Vallale - உதாரனே! உன் தமர்க்கு, Un Thamarkku - உன் அடியார் விஷயத்தில் நமன் தமர், Naman Thamar - யமபடர்கள் என்றும், Endrum - எக்காலத்திலும் கள்ளர் போன்ம், Kallar Poonm - திருடர்போலே மறைந்தொளிப்பர்கள். |