திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1745 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1745பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ பாபங்களைக் கனக்க கூடு பூரித்து வைக்க –அதனுடைய பலானுபவத்தை பண்ணுவிக்குமவர்களுக்கு மறைந்து வர்திக்கைக்கு ஹேது என் -என்ன – நீ ஆஸ்ரிதர்க்காக உன்னை அர்த்தி யாக்கின படியையும்-விரோதி நிரசன சீலனாய் இருக்கிற படியையும் அனுசந்தித்தேன் – அவை வாசனையோடே போய் நிற்க்கக் கண்டேன் -என்கிறார்) 8
மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே –8-10-8
பதவுரை Show / Hide
மாண் ஆகி, Maan Aagi - (முன்பு) வாமநப் பிரமசாரியாகி (- (கண்ணபுரத்துறை அம்மானே!- ;))
வையம், Vaiyam - உலகங்களை
அளந்ததுவும், Alandhathuvum - அளந்துகொண்டதையும்
வாள் அவுணன், Vaal Avunan - வாள்கொண்ட இரணியாசுரனுடைய
பூண் ஆகம், Poon Aagam - ஆபரணங்களணிந்தமார்பை
கீண்டதுவும், Keendathuvum - கிழித்தெறிந்ததையும்
ஈண்டு, Eendu - இப்போது
நினைத்திருந்தேன், Ninaiththirundhen - நான் அநுஸந்திக்கின்றேன்;
பேணாத, Penaadha - ஆத்மோஜ்ஜீவநத்துக்கு ஒரு நன்மையும் செய்து கொள்ளாதவனும்
வல் வினையேன் நான், Val Vinaiyen Naan - வலியபாபங்களையுடையவனுமான நான்
இடர் எத்தனையும், Idar Eththanaiyum - துளி பாவத்தையும்
காணேன், Kaanen - (என்னிடத்தில்) காண்கிறேனில்லை.