திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1746 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்முடைய விரோதி போன படி தான் என் – நீர் பெற்ற பேறு தான் என் -என்ன) 9 | நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே –8-10-9 | பதவுரை Show / Hideமுன், Mun - முந்துற (- (கண்ணபுரத்து உறை அம்மானே!- ;) (அதற்குப்பிறகு அடியேன்)) என்னை, Ennai - அடியேனை உனக்கு, Unakku - உனக்கு தொண்டு ஆக, Thondu Aaga - அடியவனாக நாட்டினாய், Naatthinai - நிறுத்திக்கொண்டாய்; அத்தனையே கொண்டு, Aththanaiye Kondu - அவ்வளவே காரணமாக என் வல் வினையை, En Val Vinaiyai - எனது கொடிய பாவங்களை மாட்டினேன், Maatthinenn - மாளச்செய்தேன்; (அதுவுமன்றி) பாட்டினால், Paattinaal - இப்படிப்பட்ட பாசுரங்களினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை, Unnai En Nenchatthu Irundhamai - நீ எனது நெஞ்சினுள் இருக்கிற படியை காட்டினாய், Kaatthinai - விளங்கச்செய்தாய். |