திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1747 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1747பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும் ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது – ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்) 10
கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே –8-10-10
பதவுரை Show / Hide
கண்ட சீர், Kanda Seer - கண்ணாலே ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடிய செல்வம் பொருந்திய
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
உறை, Urai - நித்யவாஸஞ்செய்தருள்கின்ற
அம்மானை, Ammaanai - சௌரிப் பெருமான் விஷயமாக,
சீர் கொண்ட, Seer Konda - ஸ்ரீ வைஷ்ணவலக்ஷமி வாய்ந்த
தொண்டன், Thondan - தாஸனான
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maalaik - இப்பாமாலையை
பண்டம் ஆய், Pandam Aay - நிதியாகக் கொண்டு
பாடும், Paadum - பாடவல்ல
அடியவர்க்கு, Adiyavarkku - ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
எஞ்ஞான்றும், Ennjanrum - எப்போதும்
அண்டம் போய் ஆட்சி, Andam Poi Aatchi - பரமபதத்திலிருந்து கொண்டு வானகமாளப் பெறுவதாகும்;
அவர்க்கு அது அறிந்தோம், Avarkku Adhu Arindhom - அவர்கட்கு அதுவே பேறு என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டோம்.